Home முக்கியச் செய்திகள் மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் திருகோணமலையில் விபத்தில் சிக்கியது!

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் திருகோணமலையில் விபத்தில் சிக்கியது!

0

திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம்
இன்று(02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இவ்வாறு வாகனம் விபத்திற்குள்ளானதால் திருகோணமலை
துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் பயணி காயம்

இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்துள்ளனர்.

அண்மைக்காலமாக குறித்த துறை முகத்தில் இருந்து மன்னார் நோக்கி காற்றாலை
எடுத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மன்னாரில் காற்றாலை அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version