Home இலங்கை அரசியல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் : வெளியான அறிக்கை

0

இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடந்த சில தினங்களில் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக காவல்துறை பாதுகாப்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்திற்குள் அதிக வாகனங்களை நிறுத்த முடியாத காரணத்தினால், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே உள்ள வளாகத்திலேயே மேற்படி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டவை

எனினும், இந்த வாகனங்கள் காட்சிப்படுத்துவதற்காக வைக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் வழமையான ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 41(1) பிரிவின் கீழ் நியமிக்கப்பட்ட தனிப்பட்ட ஊழியர்களுக்கு அந்த வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தவை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாகனங்களைப் பயன்படுத்தியவர்களின் முழுமையான பட்டியல் கீழே காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version