வேலணை பிரதேச வைத்தியசாலை மூடப்பட்டமையானது மாற்றங்கள் வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் அதிர்சியை
ஏற்படுத்தியுள்ளதாக குறித்த வைத்தியசாலையின் நலன்புரி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறுகையில்,
தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின்
மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக்
காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்னவினால் “பி”
தரத்திற்கு அவசர அவசரமாக தரமுயர்த்தப்பட்டது.
பெரும் அதிர்ச்சி
ஆனாலும் குறித்த தரத்திக்கு ஏற்ப ஆளணி வளங்களை நிவர்த்திக்கும் எந்தவிதமான
பொறிமுறையையும் ராஜித சேனாரத்ன ஏற்படுத்தவில்லை.
அதன் பின்னரும்
அமைக்கப்பட்ட அரசாங்கங்களில் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய தர்ப்பினரது
பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அது கண்டுகொள்ளப்படாத நிலையில் இருந்து
வந்தது.
தற்போது இந்த வைத்தியசாலை மூடப்பட்ட செய்தியானது புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் புதிய
மாற்றங்கள் வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.