Home உலகம் இஸ்ரேலை நோக்கி வந்த ட்ரொன்கள்: பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஹவுதி

இஸ்ரேலை நோக்கி வந்த ட்ரொன்கள்: பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் ஹவுதி

0

இஸ்ரேலின் அஷ்கெலோன் நகரத்திற்கு அருகே இடம்பெற்றுள்ள ட்ரோன் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

யேமனில் இருந்து ஹவுதி அமைப்பு இரண்டு ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஏவப்பட்ட ட்ரோன்களில் ஒன்று டெல் அவிவ் பகுதியில் உள்ள முக்கியமான மற்றும் உணர்திறன் இலக்கை தாக்கியதாகவும் மற்றொன்று அஷ்கெலோன் நகரத்திற்கு அருகில் விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் அதிகரிப்பு

அஷ்கெலோனில் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் திறந்த பகுதியில் தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் முன்னதாக கூறியது.

எனினும், டெல் அவிவ் பகுதியில் விழுந்ததாக கூறப்படும் இரண்டாவது ட்ரோன் காரணமாக பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் எதும் வெளியாகவில்லை.

சமீப நாட்களில் யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதிகள் இஸ்ரேல் மீது பலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், ஹவுதி அமைப்பிற்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இறுதியாக அண்மையில் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version