திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார தேரர், திருகோணமலைக்கு சென்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இதன் பின்னணியில் இன்று (18.11.2025) அங்கு சென்றுள்ளார்.
அரசாங்கம்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தை முதுகெழும்பில்லாத அரசாங்கம் என விமர்சித்துள்ளார்.
அத்தோடு, காசியப்ப தேரர் மீதான தாக்குதல் காணொளியை கண்டு ஆவேசமடைந்ததேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பௌத்த சமயத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவத்தினால் இரண்டு பிக்குகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுனாமிக்கு முதலே குறித்த விகாரைக்கான வரலாறு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
