Home இலங்கை பொருளாதாரம் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு கிடைத்த சர்வதேச கௌரவம்

சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு கிடைத்த சர்வதேச கௌரவம்

0

சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருது சிறிலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் 

உலகலாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விருதுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.  

APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் பயணிகளின் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version