Home முக்கியச் செய்திகள் மகிந்த வீட்டில் சிச்சியின் ரொக்கெட் – சீலரத்ன தேரர் கிண்டல்

மகிந்த வீட்டில் சிச்சியின் ரொக்கெட் – சீலரத்ன தேரர் கிண்டல்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராமையவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் சென்றுள்ளார்.

இதன்போது அவர் சிச்சியின் ரொக்கெட்டை பார்ப்பதற்கு மகிந்தவின் வீட்டிற்கு வருகைத்தந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தின் நிலைபாடு முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகளை இல்லாது ஒழிப்பதே.

உள்நாட்டு யுத்தம்

குறிப்பாக பல தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ஒருவரே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.

மகிந்த ராஜபக்ச இல்லையென்றால் பல தசாப்த கால யுத்தம் முடிவுற்றிருக்காது.

ஒருவேளை தான் இந்த நாட்டின் ஜனாதிபதியானால் கட்டாயம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுப்பேன்” என்றார்.

நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

NO COMMENTS

Exit mobile version