Home சினிமா விஜய்யின் கோட் படத்தின் சில விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய வெங்கட் பிரபு…

விஜய்யின் கோட் படத்தின் சில விமர்சனங்கள் குறித்து ஓபனாக பேசிய வெங்கட் பிரபு…

0

விஜய்யின் கோட்

தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த ஒரு படம் கோட், The Greatest Of All Time.

விஜய்-வெங்கட் பிரபு இருவரும் முதன்முறையாக இணைந்துள்ள இந்த கோட் படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது.

முதல் நாளிலேயே ரூ. 126 கோடி வசூலித்த இப்படம் 4 நாள் முடிவில் ரூ. 288 கோடி வசூல் செய்துள்ளது.

இப்படத்தை தயாரித்த AGS நிறுவனம் படத்தின் வசூல் குறித்து அப்டேட் வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

விமர்சனம்

அண்மையில் படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து வெங்கட் பிரபு பேசுகையில், கமர்ஷியல் படத்துக்கான விமர்சனத்தை அவர்கள் செய்யவில்லை, இந்த படத்தின் ஜானர் தொடர்பான விமர்சனமே யாரும் பண்ணவில்லை.

எதுக்கு பாடல், பழைய படத்தின் ரெஃபரன்ஸ் என்று தான் நிறைய பேசுகிறார்கள், படத்தை பற்றிய விமர்சனம் குறைவாகத்தான் இருக்கிறது. எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை கிடையாது, வேண்டுமென்றே தான் அதை படத்தில் வைத்தேன்.

எந்த ஒரு பெரிய நடிகரின் படத்திலும் மற்ற நடிகர்களின் ரெஃபரன்ஸ் கிடையாது, இந்த படத்தில் உள்ளது.

விஜய் நினைத்திருந்தால் அதை கட் செய்ய என்னிடம் சொல்லிருக்க முடியும், ஆனால் எல்லா பிரபலங்களின் ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாட வேண்டும் என்று அவர் நினைத்தார்.

ரெஃபரன்ஸ் தாண்டி படத்தின் கதை பற்றி விமர்சனம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், விமர்சனம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம், அதை ரொம்ப ஆராய முடியாது என கூலாக அவர் ஸ்டைலில் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version