Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு!

உள்ளூராட்சி தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு!

0

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மிக மந்தமான வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானதுடன் வாக்குப்பதிவு மாலை 4:00 மணி நிறைவடைந்துள்ளது.

வாக்களிப்பு வீதம்

இந்த நிலையில் ஆகக்கூடியது 60 வீதமான வாக்களிப்பு வீதமே பல்வேறு பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக இந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 60 தொடக்கம் 70 வீத வாக்குகளே பதிவாகும் என்று எதிர்வு கூறப்பட்டது.

அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் ஏனைய பிரதேசங்களை விட வாக்களிப்பில் அதிக ஆர்வம் வௌிக்காட்டப்பட்டுள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version