Home ஏனையவை ஆன்மீகம் வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆரம்பமாகியுள்ள வியாபார நடவடிக்கைகள்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஆரம்பமாகியுள்ள வியாபார நடவடிக்கைகள்

0

வெசாக் (Vesak) பண்டிகைக்காலம் நெருங்கி வருவதால் வெசாக் கூடுகளை விற்பனைக்காக காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளில் வியாபாரிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த ஆண்டு மே 23ஆம் திகதி அன்று கொண்டாடப்படவிருக்கும் வெசாக் பண்டிகைக்கான வியாபார நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 

புத்தரின் பிறப்பு, ஞானம் மற்றும் மறைவை நினைவுகூறும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வரும் முழு பௌர்ணமி அன்று பௌத்த மக்களால் வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 

செயற்கை நுண்ணறிவிற்கும் புத்தரின் போதனைகளுக்குமான தொடர்பு: விரைவில் ஆராய்ச்சிப் பணிகள்

வெசாக் கூடுகள் 

குறித்த நிகழ்வின்போது, பௌத்த மக்கள், வீடுகள் மற்றும் தங்களின் உடமைசார் இடங்களை வெசாக் கூடுகளை தொங்க விட்டு அலங்கரிப்பதனை பண்பாட்டு வழக்கமாக கொண்டுள்ளனர். 

இதற்கமைய, மக்கள் அவற்றை வாங்குவதில் அதிகமாக ஈடுபட்டு வருவதுடன் வியாபாரிகளும் அவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, வெசாக் பண்டிகை தினங்களில் பௌத்த மக்கள் மட்டுமல்லாது ஏனைய மக்களும் வெசாக் கூடுகளை வாங்குவதிலும் வீடுகளை அவற்றால் அலங்கரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகை வழங்க சதொச நிறுவனம் தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version