தர்மேந்திரா
இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் தர்மேந்திரா. இவருக்கு தற்போது 89 வயது ஆகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் இறந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது.
ஆனால், உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது என தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தெரிவித்தார்.
காந்தா படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
காலமானார்
இந்த நிலையில், பல சாதனைகளை திரையுலகில் படைத்த பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா 89 வயதில் காலமானார். இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
தர்மேந்திராவின் மறைவு பெரும் துயரத்தை திரையுலகில் உள்ளவர்களுக்கு அளித்துள்ளது. ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
