Home சினிமா தனது காதலிக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்…...

தனது காதலிக்கு அழகான பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகன் வெற்றி வசந்த்… கியூட் பதிவு

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை கடந்த வாரங்களில் சரியான டிஆர்பியை பெறவில்லை.

கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறையவே டிஆர்பியில் 5ம் இடத்திற்கு வந்துவிட்டது.

அடுத்த வாரம் கதையில் என்ன நடக்கப்போகிறது விறுவிறுப்பாக ஏதாவது கதைக்களம் அமையுமா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

2 நாள் முடிவில் தாறுமாறு வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்… எத்தனை கோடி தெரியுமா?

வெற்றி வசந்த்

இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் கொண்டாடப்படும் நடிகராக வளர்ந்துள்ளார் வெற்றி வசந்த். இவர் எந்த ஒரு பதிவு போட்டாலும் ரசிகர்கள் நல்ல லைக்ஸ் கொடுக்கிறார்கள்.

இவரும் நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார், வெளிநாடுகள் கூட சென்று வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தான் பொன்னி சீரியல் நடிகையான வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்தார்.

இன்று அவரது காதலி பிறந்தநாள், எனவே கியூட்டான புகைப்படத்துடன் வைஷ்ணவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் வெற்றி வசந்த். 

NO COMMENTS

Exit mobile version