Home சினிமா விஜய்யின் கடைசி படத்தை இந்த முன்னணி இயக்குனர் இயக்கவில்லை.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

விஜய்யின் கடைசி படத்தை இந்த முன்னணி இயக்குனர் இயக்கவில்லை.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்

0

தளபதி 69

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா

இதை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். ஆனால், இதுவரை இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைவரும் எதிர்பார்க்கும் அறிவிப்பும் வெளியாகும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெற்றிமாறன் கூறிய தகவல் 

இந்த நிலையில், விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்கப்போவது வெற்றிமாறன் என தொடர்ந்து பல தகவல்கள் வெளியானது. இதற்கு சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட வெற்றிமாறன் வெளிப்படையான பதிலை கொடுத்துள்ளார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள் தளபதி 69 படத்தை நீங்க தான் இயக்கப்போறீங்க என்று தகவல் வெளியாகியுள்ளதே, அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பினார். இதற்கு “இப்போது அது நடக்க வாய்ப்பு இல்லை” என கூறி அனைத்து விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் வெற்றிமாறன். 

NO COMMENTS

Exit mobile version