வெற்றிமாறன்
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த வெற்றியடைந்த திரைப்படம் விடுதலை 2. கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது வைக்கப்பட்டாலும் கூட வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்பதை அனைவரும் அறிவோம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கும் என கூறுகின்றனர்.
மதகஜராஜா படம் முதல் நாள் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
9வது திரைப்படம்
இந்த நிலையில், வாடிவாசல் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கப்போகும் அவருடைய 9வது திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோலார் தங்க வயலை (கேஜிஎப்) மையமாக வைத்து தனது 9வது படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் தனுஷ் மற்றும் ஜீனியர் என்டிஆர் நடிக்கப்போகிறார்கள் என கூறுகின்றனர்.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் என நான்கு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி , தற்போது ஐந்தாவது முறையாகவும் இணைந்துள்ளனர். இதுகுறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஆனால், கதைக்களம் கேஜிஎப்-ஐ மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்றும், இதில் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார் என்பது குறித்து இதுவரை அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#ViduthalaiPart2 completes 25 days in theatres! Celebrating this milestone with the announcement of TWO NEW PROJECTS from @rsinfotainment Director #VetriMaaran’s 9th directorial venture stars @dhanushkraja marking another iconic collaboration! Meanwhile, @MathiMaaran makes his… pic.twitter.com/Ysdw00oPxa
— Red Giant Movies (@RedGiantMovies_) January 13, 2025