Home சினிமா வேட்டையன் திரைவிமர்சனம்

வேட்டையன் திரைவிமர்சனம்

0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

அனிருத் – ரஜினிகாந்த் கம்போ, TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி எப்படி இருப்பார்? அமிதாப் பச்சனுடன் பல ஆண்டுகள் கழித்து இணைகிறார் ரஜினி என பல எதிர்பார்ப்புகள் படத்தின் மீது இருந்த நிலையில், அனைத்தையும் வேட்டையன் பூர்த்தி செய்துள்ளதா என விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

ரஜினி ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் அதை விசாரித்து என்கவுண்டர் செய்யும் ஸ்பெஷல் ஆபிசர். அப்படி ஒரு என்கவுண்டர் மூலம் என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் அதை எதிர்கிறார்.

ரஜினி என்கவுண்டர் மட்டுமே ஒரே தீர்வு என்று இருக்க, துஷாரா ரஜினிக்கு ஒரு புகார் கொடுப்பதன் மூலம் அறிமுகமாகிறார். அவர் சென்னையில் ஒரு வேலைக்கு செல்கிறார்.

அப்படி வேலைக்கு சென்ற இடத்தில் அசல் கோளாரால் கொலை செய்யப்படுவதாக காட்டப்பட்டு அசல் கோளாரு என்கவுண்டர் செய்யப்படுகிறார். பிறகு தான் அமிதாப் நீ சுட்டது ஒரு நல்லவனை என நிரூபிக்கின்றார்.

அப்படியானால், துஷாரை கொன்றது யார் என்ற தேடுதலை ரஜினி தொடங்க அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமே இந்த வேட்டையன்.

வேட்டையன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா

படத்தை பற்றிய அலசல்

ரஜினிகாந்த் 73 என்ன இன்னும் 10 வருடம் ஆனாலும் ஒரே ஆளாக தூள் கிளப்புகிறார். பகத் பாசிலின் பில்டப் வசனங்களுடன் ரஜினி Entry பட்டாசு கொழுத்திவிட்டார் ஞானவேல். அட ஜெய் பீம் எடுத்தவரா என கேட்க வைக்கிறது.

ஆனால், அதை தொடர்ந்து நான் ஜெய் பீம் டைரக்டர் தான் என போலி என்கவுண்டர், Entrance exam-ஆல் நடக்கும் விளைவுகள் என மிக அழுத்தமாக சொல்கிறார்.

அதிலும் வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான், முடி கலர் பண்ணவே தப்பு பண்ணுவான் போன்ற போலி லாஜிக்குகளை ரஜினியை வைத்தே ஞானவேல் சுக்கு நூறாக உடைத்துள்ளார், அதற்கே ஒரு பூங்கொத்து.

பகத் ஒரு திருடனாக இருந்தாலும் ரஜினிகாக அவர் உதவும் இடம், அதோடு ரித்திகாவிடம் அவர் அடிக்கும் கவுண்டர் என கலகலப்பாக தன் கதாபாத்திரத்தை செய்தது மட்டுமில்லாமல், ரஜினி கடைசியில் மகன் தான் என தலையாட்டும் இடம் கலங்க வைக்கின்றனர்.

படம் முதல் பாதி ஏதோ கிரைம் திரில்லர் போல் சென்று, அப்படியே சமூக பிரச்சினையை எடுத்த விதம், அதிலும் ரஜினி போல் ஒரு உச்ச நட்சத்திரம் இந்த கதையை செய்தது சபாஷ். அதே நேரத்தில் ராணா வழக்கமான கார்ப்ரைட் வில்லன் போல் வந்து செல்வது இரண்டாம் பாதி கொஞ்சம் நார்மல் கமர்ஷியல் படமாகவே கடந்து செல்ல முடிகிறது.

ரஜினி மொமண்ட் என்பது படத்தின் வெற்றிக்கு முக்கியத்துவம் என்பதை உணர்ந்து சப்வே பைட், லிப்ட் சீன் என சில காட்சிகள் கைத்தட்ட வைத்தாலும், கிளைமேக்ஸ் எதோ ஷங்கர் படம் போல் ஒரே ஆளாக ரஜினி வந்து வில்லனை பிடிப்பது எல்லாம், சரி எப்படி பார்த்தாலும் ரஜினி படம் தானே என்று கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.

மேலும், படத்தின் மிகப்பெரும் பலம் டெக்னிக்கல் விஷயங்கள், அனிருத் பின்னணி இசை ரஜினியின் மாஸ், அமிதாப்-ன் க்ளாஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு ஒரு சூப்பர் ஸ்டார் படத்தை எவ்வளவு ரியாலாக காட்ட முடியுமோ காட்டியுள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், இன்றைய தலைமுறைக்கு ஏற்ற கதை.

ரஜினி ஆல்வேஸ் ஒன் மேன் ஷோ என்றாலும், பகத், அமிதாப், துஷாரா, ரித்திகாவின் நடிப்பும் சூப்பர்.

அனிருத் இசை

பல்ப்ஸ்

ராணா கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம், அதனால் என்னவோ இரண்டாம் கொஞ்சம் யதார்த்தத்திலிருந்து விலகி செல்கிறது.


மொத்தத்தில் விவாதத்தை ஏற்படுத்துவான் இந்த வேட்டையன்.
 

NO COMMENTS

Exit mobile version