Home இலங்கை அரசியல் இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு

0

இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

75ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 பதவி உயர்வு 

இதன்படி இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 1,273 இதர நிலைகளில் உள்ளவர்களும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெறவுள்ளனர்.

1949 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவமானது அன்றிலிருந்து இன்று வரை தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கடமையினை சிறப்பாக செய்துவருவதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை இராணுவத்திற்கு, தேசத்திற்காய் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகளுக்காக  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த 75 வருடங்களாக தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு உயிர் தியாகம் செய்த வீரர்கள் மற்றும் முழுமையாக ஊனமுற்ற சகல வீரர்களையும் கௌரவத்துடன் நினைவுகூர்ந்துள்ளார்.

75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை இராணுவம் பல நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version