வேட்டையன்
ரஜினியின் நடிப்பில் கடந்த அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன்.
சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஞானவேல், ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, ரித்திகா சிங் போன்றவர்கள் நடிக்க வேட்டையன் படம் வெளியாகி இருந்தது.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் வெளியாகி போட்ட பணத்தை விட அதிகமளவு வசூல் வேட்டை நடந்து வருகிறது.
தமிழக வசூல்
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எப்போது என்ற விவரம் இதுவரை சரியாக வெளிவரவில்லை.
இப்போது வரை படம் தமிழகத்தில் ரூ. 86 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/vettaiyan-movie-tamilnadu-bo-details-1729047365
