Home சினிமா விடாமுயற்சி படத்திற்கு வந்த பெரிய சிக்கல்.. கதைக்கு ஹாலிவுட் நிறுவனம் கேட்கும் நஷ்டஈடு

விடாமுயற்சி படத்திற்கு வந்த பெரிய சிக்கல்.. கதைக்கு ஹாலிவுட் நிறுவனம் கேட்கும் நஷ்டஈடு

0

அஜித்தின் விடாமுயற்சி படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர்ந்து பல காரணங்களால் தாமதம் ஆனது. ஷூட்டிங் இந்தியா மட்டுமின்றி அசர்பைஜான் நாட்டில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டு இருக்கிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் வெளிவந்த டீசரில் அறிவித்து இருக்கின்றனர்.

சிக்கல்

விடாமுயற்சி படத்தின் கதை Breakdown என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என கூறப்படுகிறது. அதற்கான உரிமையை படக்குழு வாங்காமலேயே படமாக்கி இருக்கிறார்கள் என்றும், தற்போது அந்த ஹாலிவுட் படத்தை தயாரித்த நிறுவனம் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம்.

ரூபாய் 150 கோடி நஷ்டஈடு கேட்டிருப்பதாக பிரபல பத்திரிகையாளரான வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version