Home சினிமா ரிலீஸுக்கு முன் வசூலில் மாஸ் காட்டும் அஜித்.. விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்

ரிலீஸுக்கு முன் வசூலில் மாஸ் காட்டும் அஜித்.. விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்

0

விடாமுயற்சி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மங்காத்தா படத்திற்கு பின் மீண்டும் அஜித் – த்ரிஷா – அர்ஜுன் காம்போ இப்படத்தில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிளாப் படத்தால் தான் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு ரெட்ரோ பட வாய்ப்பு கிடைத்ததா?… அவரே கூறிய விஷயம்

அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நாளை பிரம்மாண்டமான முறையில் விடாமுயற்சி படம் உலகளவில் வெளிவரவுள்ளது.

ப்ரீ புக்கிங் வசூல்

இந்த நிலையில், ரிலீஸுக்கு முன் இப்படம் உலகளவிலும், தமிழ்நாட்டிலும் செய்துள்ள ப்ரீ புக்கிங் கலெக்ஷன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி படம் உலகளவில் ப்ரீ புக்கிங்கில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 14 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் கண்டிப்பாக முதல் நாள் வசூல் உலகளவில் மாபெரும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version