வாழைச்சேனையை பகுதியில் நபரொருவர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற சந்தர்ப்பத்தில், பொறுப்பான வைத்தியர் அலட்சியமாக பதிலளிக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வாழைச்சேனை பகுதியில் நபரொருவர் விபத்தொன்றில் தனது கையில் ஏற்பட்ட முறிவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக குறித்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வெகு நேரமாக சிகிச்சைக்காக காத்திருந்தும் மருத்துவர் சிகிச்சையளிக்காத காரணத்தினால், மருத்துவரிடம் வினவிய போது, மருத்துவர் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.
அலட்சியமான நடவடிக்கை
மருத்துவர் இவ்வாறு அலட்சியமாக பதிலளிக்கும் காணொளியை சிகிச்சைக்காக சென்ற நபரின் நண்பர் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பெண் மருத்துவரின் அலட்சியமான நடவடிக்கை காரணமாக சிகிச்சைகளுக்காக வருகைத்தந்த நபர், தான் அநுராபுரம் மருத்துவமனைக்கே செல்வதாகக் கூறி விட்டு வெளியேறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை பதிவிட்டு, குறித்த சம்பவத்தை கண்டித்துள்ளார்.
https://www.youtube.com/embed/QvC9w_iBSeQ
