இந்தோனேசியாவில் தலைமறைவாக இருந்தபோது, பாதாள உலக குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த, பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோர் கைது செய்யப்பட்டபரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன
இலங்கையில் இருந்த இந்தோனேசியா புறப்பட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள் ரோஹன் ஒலுகல மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் மஹிந்த ஜெயசுந்தரா ஆகியோர் வழங்கிய தகவலின்படி குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள கெபோன் ஜெருக் பகுதியில் அமைந்துள்ள இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சம்பந்தப்பட்ட குழு மறைந்திருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன்போது, மேற்கூறப்பட்ட குற்றவாளிகள் மடக்கி பிடிக்கப்படும் காட்சிகள் குறித்த காணொளியில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஜகார்த்தா பெருநகர காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு (ஜத்ரானாஸ்) மற்றும் இன்டர்போல் ஆதரவு அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பான பரபரப்பு காட்சிகள் வருமாறு…
https://www.youtube.com/embed/Onu7UgI-d-w
