Home சினிமா விடுதலை படத்தின் சென்சார் சான்றிதழ்.. ரசிகர்ளுக்கு ஷாக் கொடுத்த ரன் டைம்

விடுதலை படத்தின் சென்சார் சான்றிதழ்.. ரசிகர்ளுக்கு ஷாக் கொடுத்த ரன் டைம்

0

விடுதலை 

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வருகிற 20ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் விடுதலை 2. இப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து விடுதலை 2 மீது பெரிதும் எதிர்பார்ப்பு உருவானது. விடுதலை படம் தான் நகைச்சுவை நாயகனாக இருந்த சூரியை, கதையின் நாயகனாக மாற்றியுள்ளது. சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கவுதம் மேனன், ராஜிவ் மேனன், கென் கருணாஸ், அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் விடுதலை 2ல் நடித்துள்ளனர்.

திரையரங்கில் வரவேற்பு இல்லை.. ஆனால் OTT-யில் மாஸ் சாதனை படைத்த கங்குவா..

சென்சார் சான்றிதழ், ரன் டைம்

படம் வெளிவர இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில், சென்சார் சான்றிதழ் வெளிவந்துள்ளது. இதில் விடுதலை 2 படத்தின் ரன் டைம் 2 மணிநேரம் 53 நிமிடங்கள் என இருக்க ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

நீளமான படங்களை திரையில் காணும் ரசிகர்கள் பலரும், தொய்வு ஏற்படுகிறது என்பதை தொடர்ந்து விமர்சனமாக கூறி வருகிறார்கள். ஆனால், வெற்றிமாறன் படம் என்பதால் கண்டிப்பாக 2 மணிநேரம் 53 நிமிடங்கள் என்பது கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version