விடுதலை 2
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
இதுவரை தோல்வியே கண்டிராத இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விடுதலை 2.
சிறந்த நடிகர்கள் 2024: நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தவர்களின் பட்டியல்
இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், கென் கருணாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும், விமர்சனங்களும் படத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
வசூல்
உலகளவில் விடுதலை படம் நான்கு நாட்களில் ரூ. 37 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விடுதலை 2 படம் தமிழ்நாட்டில் மட்டுமே நான்கு நாட்களில் ரூ. 26 கோடி வசூல் செய்துள்ளது.