விடுதலை 2
கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் விடுதலை முதல் பாகம். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக இருந்த சூரி, கதையின் நாயகனாக மாறினார்.
இவருடைய சண்டை காட்சிகளும், வசனங்களும் திரையரங்கில் கைதட்டல்களை பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 20ஆம் தேதி வெளிவந்தது. விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தான் இப்படம் நகர்ந்தது.
விடுதலை 2 படத்திற்காக நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் விடுதலை 2, முதல் நாள் உலகளவில் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்து, நல்ல ஓப்பனிங் கொடுத்திருந்தது.
இந்த நிலையில், இரண்டு நாட்களில் விடுதலை 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 22 கோடி வசூல் செய்துள்ளது.