Home சினிமா நமது கொடி பறக்கும்..இனி தமிழ் நாடு சிறக்கும்!! நடிகர் விஜய் அறிக்கை..

நமது கொடி பறக்கும்..இனி தமிழ் நாடு சிறக்கும்!! நடிகர் விஜய் அறிக்கை..

0

விஜய்

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கினார்.

தாம் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்டுள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு இனி முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.

அறிக்கை

இந்நிலையில் நடிகர் விஜய் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள் தான் 2024 ஆகஸ்ட் 22.

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு.

கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்.. தமிழ்நாடு இனி சிறக்கும்..
வெற்றி நிச்சயம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

NO COMMENTS

Exit mobile version