விஜய் ஆன்டணி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹிட்லர்’ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
அமைச்சர் ராஜவேலுக்கு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த முறை முதலைமைச்சர் ஆகும் வாய்ப்பு உள்ளது.
எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர் கோடிக்கணக்கில் பணத்தை மக்களுக்கு பட்டுவாடா செய்ய முயல்கிறார்.
அதே சமயம், வேலை தேடி சென்னை வரும் செல்வா (விஜய் ஆன்டணி) எலக்ட்ரிக் ரயில் பயணிக்கும்போது அமைச்சரின் கோடிக்கணக்கான பணம் கொள்ளைப்போகிறது.
மேலும் 3 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
பணம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும் செல்வாவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா? அந்த கொலைகளை செய்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடைதான் படத்தின் மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
படத்தின் முதல் பாதி மெதுவாக ஆரம்பித்து பின் வேகம் பிடிக்கிறது.
குறிப்பாக எலக்ட்ரிக் ரயில் காட்சி சிறப்பு.
செல்வா கதாபாத்திரத்தில் விஜய் ஆன்டணி சிறப்பாக நடித்துள்ளார்.
ஹீரோயினிடம் ரொமான்ஸ் செய்யும் அவர், சண்டைக் காட்சிகளிலும் அசத்துகிறார்.
மிரட்டலான போலீஸ் அதிகாரியாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் இரண்டாவது ஹீரோ என்றே கூறலாம். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபத்திரம் அவருக்கு.
ரியா சுமன் உறுத்தல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஊழல் அரசியல்வாதியாக வரும் சரண்ராஜ், அவரது தம்பியாக தமிழ், ஆடுகளம் நரேன், ரெட்டின் கிங்ஸ்லி என அனைவரும் தங்கள் பாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள்.
இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகள் எளிதில் யூகிக்கக்கூடிய வகையில் உள்ளன. எனினும் திரைக்கதை தொய்வில்லாமல் நகர்கிறது.
இதே கதையை ஏற்கனவே வேறொரு ஹீரோ நடிப்பில் வெளியான படத்தில் பார்த்திருப்பது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
க்ளாப்ஸ்
விறுவிறுப்பான திரைக்கதை
படத்தின் மேக்கிங்
நடிகர்களின் நடிப்பு
பல்ப்ஸ்
வேறொரு படத்தை நினைவுப்படுத்தும் கதை
மொத்தத்தில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் பார்க்க வேண்டும் என்கிறவர்கள் இந்த ஹிட்லரை ரசிக்கலாம்.