மார்கன்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்தான் மார்கன்.
க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்தை அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் நடித்திருந்தனர்.
நேரில் சென்ற விஜய்.. போலிஸ் அடித்து கொன்ற அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல், நிதி உதவி
வசூல்
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், மார்கன் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிசில் இதுவரை 6 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்த 6 நாட்களில் உலகளவில் ரூ. 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் மார்கன் திரைப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.