Home சினிமா போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், அதிர்ச்சி தகவல் கூறிய விஜய் ஆண்டனி…

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், அதிர்ச்சி தகவல் கூறிய விஜய் ஆண்டனி…

0

ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர்.

கடந்த சில வருடங்களாக இவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை, ஆனால் அவர் முயற்சி விடாமல் தரமான கதையுள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் போதைப் பொருள் வழக்கில் கைதானது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. நடிகர் ஸ்ரீகாந்த்தா இப்படி என பலருமே ஷாக் ஆனார்கள்.

விஜய் ஆண்டனி

நடிகர் ஸ்ரீகாந்த் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து நடிகர் கிருஷ்ணா இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளார். இத்தனை நாள் தலைமறைவாக இருந்த இவரை கேரளாவில் போலீசார் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், போதைப் பொருள் விஷயம் குறித்து விஜய் ஆண்டனியிடம் மார்கன் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்களாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பழக்கம் என கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version