ரஜினியின் ரசிகர் விஜய்
நடிகர் விஜய் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ரஜினியின் அண்ணாமலை படத்தின் வசனத்தை தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரிடம் பேசிக்காட்டிதான் முதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பை விஜய் பெற்றார்.
இதன்பின் தனது பல்வேறு படங்களில் ரஜினியின் ஸ்டைலை செய்து அசத்தியுள்ளார். அப்படி ரஜினியை பார்த்து சினிமாவிற்குள் வந்த விஜய் இன்று அவருடன் இணைந்து டாப் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ
வாய்ப்பு கேட்ட விஜய்
ரஜினியின் ரசிகராக இருக்கும் திரையுலக நட்சத்திரங்கள் அனைவருக்கும் அவருடன் இணைந்து நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கும். அப்படி விஜய்க்கும் ஆசை இருந்துள்ளது.
இந்த நிலையில், ரஜினியின் ப்ளாக்பஸ்டர் படையப்பா திரைப்படத்தில் நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என விஜய் கேட்டுள்ளார். இதை அவரே ஒரு மேடையில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது படையப்பா ரீ ரிலீஸ் சமயத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
