Home சினிமா அம்பேத்கர் அவமதிப்பு.. மத்திய அமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன்: நடிகர் விஜய்

அம்பேத்கர் அவமதிப்பு.. மத்திய அமைச்சரை வன்மையாகக் கண்டிக்கிறேன்: நடிகர் விஜய்

0

“அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என சொல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. அதற்கு பதில் கடவுள் பெயரை கூறி இருந்தால் எதிர்க்கட்சியினர் சொர்கத்திற்காவது சென்று இருக்கலாம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது.

அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தற்போது கூறி வருகின்றன. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் இந்த விஷயம் பற்றி X தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

கண்டிக்கிறேன்

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்…
அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு விஜய் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version