Home சினிமா பட ரிலீஸ் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டா.. என்ன ஆச்சு?

பட ரிலீஸ் நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் தேவரகொண்டா.. என்ன ஆச்சு?

0

விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவை தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக உள்ளார்.

ஆரம்பத்தில் ஹிட் படங்களின் நாயகனாக கொண்டாடப்பட்ட விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் அவ்வளவாக ஹிட்டடிக்கவில்லை.

அதிலும் Liger, குஷி போன்ற படங்கள் பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்பட சரியான வரவேற்பு பெறவில்லை.

தற்போது விஜய் தேவரகொண்டாவுடன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் ஆகியோர் நடிக்க தயாராகியுள்ள படம் கிங்டம். இப்படம் வரும் ஜுலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிவகார்த்திகேயன்-வெங்கட் பிரபு படத்தின் இசையமைப்பாளர் இவரா?.. முதன்முறையாக அமையும் கூட்டணி

மருத்துவமனை

படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படக்குழு புரொமோஷன் வேலைகளில் செம பிஸியாக இருக்க திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விஜய் தேவரகொண்டா.

என்ன விஷயம் என்றால், அதிக காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு டெங்கு காய்ச்சல் பரவலின் அறிகுறியாக இருக்கலாம் என கூறப்படுகிறதாம்.  

NO COMMENTS

Exit mobile version