Home சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட போகும் விஜய்யின் கோட் பட Advance புக்கிங்.. இத்தனை கோடி வசூலா?

பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட போகும் விஜய்யின் கோட் பட Advance புக்கிங்.. இத்தனை கோடி வசூலா?

0

விஜய்யின் கோட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. கேரளா, ரஷ்யா, சென்னை என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்தன. 

அதிலும் கேரளாவில் இப்பட படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை காண எவ்வளவு கூட்டம் கூடியது என்பதை நாமே கண்டோம். 

ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் சிங்கிள் பாடல்கள், டிரைலர் எல்லாம் வெளியாகி சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பி வருகிறது. இதற்கு நடுவில் இன்று நடிகர் விஜய் தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். 

காலை 9.15 மணியளவில் கட்டி கொடியின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

அல்வா கேட்ட விஜயாவிற்கு அல்வாவே கொடுத்து செம பதிலடி கொடுத்த மீனா… செம சீன், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ

வசூல்

படத்தின் ரிலீஸ் நெருங்கிவரும் நிலையில் புக்கிங் படு சூடாக நடக்கிறது. தற்போது ப்ரீமியர் மற்றும் முதல் நாள் புக்கிங்கில் ஓவர்சீஸில் படம் ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

இந்தியளவில் மொத்தமாக படம் எவ்வளவு புக்கிங் கலெக்ஷன் பெறுகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம். 

 

NO COMMENTS

Exit mobile version