Home சினிமா அட்ரெஸ் இல்லாத லெட்டர்.. விஜய் பேசியதற்கு கமல் ஓப்பனாக கொடுத்த பதில்

அட்ரெஸ் இல்லாத லெட்டர்.. விஜய் பேசியதற்கு கமல் ஓப்பனாக கொடுத்த பதில்

0

நடிகர் விஜய் இன்று மதுரையில் நடத்திய மாநாட்டில் லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கலந்துகொண்டனர். ரசிகர் கூட்டத்தை பார்த்து விஜய்யே மேடையில் எமோஷ்னல் ஆகிவிட்டார்.

மேடையில் ஆவேசமாக பேசிய விஜய் திமுக, பாஜக ஆகிய கட்சிகளை தாக்கி பேசினார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை பற்றி கடுமையாக விமர்சித்த விஜய் “ஸ்டாலின் அங்கிள், வாட் அங்கிள். வெரி ராங் அங்கிள்” என விஜய் பேசி இருக்கிறார்.

மேலும் விஜய் பேசும்போது தான் கெரியனின் உச்சத்தில் இருக்கும்போது அரசியலுக்கு வந்திருக்கிறேன், மார்க்கெட் இறங்கியபிறகு வரவில்லை என கூறி இருக்கிறார். அவர் கமல்ஹாசனை தான் இப்படி தாக்கி பேசி இருக்கிறார் என ஒரு தரப்பினர் இது பற்றி கூறி வருகின்றனர்.
 

கமல் பதில்

இது பற்றி செய்தியாளர்கள் கமல்ஹாசனிடம் கேட்டபோது, ‘அவர் என் பெயரை கூறி இருக்கிறாரா, வேறு யார் பெயரையவது கூறி இருக்கிறாரா. அப்புறம் ஏன்? அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா.’

‘அவர் எனக்கு தம்பி’ என கமல்ஹாசன் கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version