சச்சின் படம்
கியூட்டாக, அழகா, ஒரு ஜாலி கதாபாத்திரத்தில் நடித்து விஜய் அசத்திய படம் தான் சச்சின்.
கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய்-ஜெனிலியா நடிக்க வெளியாகி இருந்தது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் தான்.
கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இப்படம் மொத்தமாக ரூ. 25 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.
முதல் சாய்ஸ்
அண்மையில் கலைப்புலி எஸ். தாணு, விஜய் நடித்த சச்சின் படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது சச்சின் படத்தில் விஜய்க்கு பதிலாக முதலில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் தான் நடிக்க வேண்டியது.
ஆனால், சில பல காரணங்களால் அவரது கால்ஷீட் கிடைக்காத நிலையில், விஜய் அந்த படத்தில் கமிட்டாகி நடித்து படத்தை வேறலெவலுக்கு ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றுவிட்டார் என கலைப்புலி எஸ். தாணு கூறியுள்ளார்.