Home சினிமா விஜய் அதற்கு பொறுப்பு அல்ல.. கரூர் சம்பவம் பற்றி பேசிய நடிகர் அஜித்

விஜய் அதற்கு பொறுப்பு அல்ல.. கரூர் சம்பவம் பற்றி பேசிய நடிகர் அஜித்

0

நடிகர் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு அளித்திருக்கும் பேட்டி தற்போது வைரல் ஆகி இருக்கிறது. அந்த பேட்டியில் அவர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றியும் பேசி இருக்கிறார்.

நடிகர் விஜய்யை நேரில் பார்ப்பதற்காக பிரச்சார கூட்டத்திற்கு சென்று 41 பலி ஆகினர். அதில் பலரும் குழந்தைகள். அந்த சம்பவம் பற்றி பேசிய அஜித் “முதல் நாள் முதல் காட்சியில் ஏற்பட்ட மரணம், மற்றும் இதுபோன்ற கூட்டநெரிசல் சம்பவம் ஆகியவை சினிமா துறையை மோசமாக காட்டுகிறது” என அவர் கூறி இருக்கிறார்.

அவர் பொறுப்பல்ல

“கூட்ட நெரிசல் சம்பவத்தால் தமிழ்நாட்டில் பல்வேறு விஷயங்கள் நடக்கிறது. அதற்கு அந்த நபர் (விஜய்) பொறுப்பல்ல. நாம் எல்லாருமே பொறுப்பு.”

“நம் சமுதாயம் இப்படி மாறிவிட்டது. இது முடிய வேண்டும். கிரிக்கெட் மேட்ச் பார்க்க கூட்டம் கூடுகிறது. ஆனால் அங்கு அப்படி நடப்பதில்லை. தியேட்டர், சினிமா நடச்சத்திரம் வெளியில் வரும்போது மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. சினிமா துறையை இது தவறாக காட்டுகிறது” என அஜித் பேசி இருக்கிறார்.

அஜித்தின் பேட்டி தற்போது வைரல் ஆகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version