Home சினிமா ஜனநாயகன் கொடைக்கானல் ஷூட்டிங்கில் விபத்து.. ஒருவருக்கு காயம்! என்ன நடந்தது..

ஜனநாயகன் கொடைக்கானல் ஷூட்டிங்கில் விபத்து.. ஒருவருக்கு காயம்! என்ன நடந்தது..

0

நடிகர் விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் இதன் ஷூட்டிங் தற்போது கொடைக்கானலில் நடந்து வருகிறது.

அங்கு செல்வதற்காக விஜய் சமீபத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றார். அப்போது அவரை பார்ப்பதற்கு பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. அட்வைசை மீறி அவர்கள் விஜய் சென்ற வண்டியை பின்தொடர்ந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின் கொடைக்கானலுக்கு சாலை வழியாக சென்ற விஜய் தற்போது ஷூட்டிங்கில் பங்கேற்ற வருகிறார்.

விபத்து

கொடைக்கானல் தாண்டிக்குடி என்ற இடத்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் பெரிய லைட் தலை மீது விழுந்ததில் லைட் மேனுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
 

NO COMMENTS

Exit mobile version