பாகிஸ்தானுடன் ஒரு யுத்தம் என்று வருகின்றபோது Cold Start Doctrine என்கின்ற ஒருவகை யுத்தக் கோட்பாட்டைத்தான் இந்தியா கடைப்பிடித்துவருகின்றது.
அதாவது பாக்கிஸ்தானிடம் அணுவாயுதங்கள் இருக்கின்றன என்பதை உள்வாங்கி, இந்தியா மேற்கொள்ளக்கூடிய யுத்த நகர்வுகள் ஒரு அணுவாத யுத்தமாக மாறிவிடக்கூடாது என்பதான கணிப்பீட்டின் அடிப்படையில்தான் இந்தியாவினது யுத்த வீயுகம் இருக்கும்.
அதனால் இந்தியாவின் போர் முன்னெடுப்புகளானாலும் சரி, போர் நகர்வுகளானாலும் சரி, அதில் ஒரு நிதானம் நிச்சயம் இருக்கும்.
இந்தியாவின் இந்த நிதானத்தை, தாமதத்தை பாக்கிஸ்தான் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு இந்தியா மீது முன்கூட்டிய தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.
இந்த விடயம் பற்றி ஆழமாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
https://www.youtube.com/embed/CE4_fH11y5Y
