2022 ஆம் ஆண்டு அரகலய காலப்பகுதியில் தீ வைப்பால் தமது வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் இழப்பீடு பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தநிலையியே, முன்னாள் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் 92 பேர் 62 கோடி ரூபாயை இழப்பீடாக பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (3) பிற்பகல் ஹொரணை கோனபொல பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீடு
இதேவேளை, 2022 மே 09 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தின் போது தீ வைப்புகள் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சொத்து சேதத்திற்கு இழப்பீடு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை பெப்ரவரி 6 ஆம் திகதி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் சமர்பித்திருந்தார்.
குறித்த பட்டியலின் படி, 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ரூ. 1.22 பில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
