விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தற்போது அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளார். ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
55 வயதை எட்டிய நடிகர் மாதவன்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
ஜனநாயகன் படத்திற்கு பின் விஜய்யை திரையரங்கில் கொண்டாட முடியாது என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும், அவருடைய சூப்பர்ஹிட் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்து கொண்டாடலாம் என பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வந்தனர்.
ரீ ரிலீஸ்
ஏற்கனவே கில்லி மற்றும் சச்சின் ஆகிய படங்கள் ரீ ரிலீஸாகி மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் விரைவில் தளபதி விஜய்யின் குஷி மற்றும் சிவாகாசி ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், எந்த தேதியில் ரீ ரிலீஸ் என இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
