Home சினிமா ‘அமரன்‘ முகுந்த் வரதராஜன் மகளுடன் விஜய்.. பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்

‘அமரன்‘ முகுந்த் வரதராஜன் மகளுடன் விஜய்.. பல வருடங்களுக்கு முன்பே அவர் செய்த விஷயம்

0

தற்போது நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் அமரன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜமான வாழ்க்கையை மையப்படுத்தி தான் இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

முகுந்த் வரதராஜன் ஆக சிவகார்த்திகேயன் மற்றும் அவர் மனைவி இந்து ரோலில் சாய் பல்லவி ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.

சமீபத்தில் ரிலீஸ் ஆன இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரல் ஆனது. மேஜர் முகுந்த் அவரது குழந்தை உடன் இருக்கும் நிஜமான வீடியோவும் ட்ரைலரில் இடம்பெற்று இருந்தது.

இர்பான் போல நடிகர் அஜித் மனைவி ஷாலினி பிரசவத்தின்போது செய்த விஷயம்! – மருத்துவர் கேள்வி

மேஜர் முகுந்த் மகளை சிரிக்க வைத்த விஜய்

மேஜர் முகுந்த் காஷ்மீரில் வீரமரணம் அடைந்தபிறகு அவரது குடும்பமே கடும் சோகத்தில் மூழ்கி இருந்தது. அந்த நேரத்தில் மேஜர் முகுந்த்தின் மகள் அர்ஷி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்பது ஒரு நபர் மூலமாக தெரியவந்திருக்கிறது.

அர்ஷி தனது அப்பா முகுந்த் உடன் தலைவா படம் பார்த்து இருந்தாராம். அதில் வரும் தமிழ் பசங்க பாடல் அவருக்கு அதிகம் பிடிக்குமாம்.

இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்டு விஜய் மேஜர் முகுந்த் குடும்பத்தை சந்தித்து இருக்கிறார். அர்ஷியுடன் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்ட விஜய் அவரை சிரிக்க வைத்து இருக்கிறார்.

அப்போது எடுத்த போட்டோவும் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version