Home சினிமா யூடியூப்பில் புதிய சாதனை படைத்து மாஸ் காட்டும் விஜய்யின் அரபிக் குத்து பாடல்.. என்ன தெரியுமா?

யூடியூப்பில் புதிய சாதனை படைத்து மாஸ் காட்டும் விஜய்யின் அரபிக் குத்து பாடல்.. என்ன தெரியுமா?

0

பீஸ்ட்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை முன்னணி இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை. ஆனால், படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

தரமான சம்பவம் இருக்கு.. ஜனநாயகன் படம் குறித்து நடிகை மமிதா உடைத்த ரகசியம்

என்ன தெரியுமா? 

அதில், குறிப்பாக ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகி பல்வேறு சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது.

அதாவது, அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் 700 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரபிக் குத்து பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version