Home சினிமா விஜய்யின் பூவே உனக்காக படத்திற்காக இப்படியொரு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டதா?.. நடிகை சொன்ன விஷயம்

விஜய்யின் பூவே உனக்காக படத்திற்காக இப்படியொரு கிளைமேக்ஸ் எடுக்கப்பட்டதா?.. நடிகை சொன்ன விஷயம்

0

பூவே உனக்காக

விக்ரமன் இயக்கத்தில் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார், ஜெய்கணேஷ், மலேசியா வாசுதேவன் என பலர் நடிக்க நகைச்சுவையான காதல் திரைப்படமாக வெளியானது பூவே உனக்காக.

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்தார். படத்தின் கதை, பாடல் என அனைத்துமே படத்தில் ஹிட் தான்.

படம் வெளியாகி 29 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனால் இப்போது படத்தை தொலைக்காட்சியில் போட்டாலும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பார்கள்.

நடிகை பேட்டி

இந்த படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற சங்கீதா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பூவே உனக்காக படம் குறித்து ஒரு விஷயம் கூறியுள்ளார். இந்த படத்தின் கிளைமேக்ஸில் விஜய் தான் காதலித்த பெண்ணை அவர் காதலித்தவருடன் சேர்த்து வைத்துவிட்டு கிளம்பிவிடுவார்.

இது ஒரு கிளைமேக்ஸ், ஆனால் இன்னொரு கிளைமேக்ஸில் விஜய்-சங்கீதா இருவரும் இணைவது போல எடுத்தார்களாம்.

ஆனால் படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் தேர்வு செய்தது அப்போது இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த இப்போது எனது கணவருமான சரவணன் தான் காரணம் என கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version