Home சினிமா அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

அரசன் 

வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக அனிருத்துடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் இதுவே ஆகும்.

விஜய் சேதுபதி

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அரசன் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து, நடக்காமல் போனது. ஆனால், தற்போது அதே உலகில் நடக்கும் கதையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இவர் வில்லனா? அல்லது வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.

இதுவரை சரிகமப டைட்டில் வென்ற ஐந்து போட்டியாளர்கள்.. யார் யார் தெரியுமா? லிஸ்ட் இதோ

சிம்பு – விஜய் சேதுபதி – வெற்றிமாறன் காம்போவை பார்க்கும்போது, அரசன் புரோமோ வீடியோவில் வந்த இயக்குநர் நெல்சன் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், ’வேற மாறி வேற மாறி’. 

NO COMMENTS

Exit mobile version