Home சினிமா பெரிய மனுஷன் மாதிரி நடந்துகோங்க.. மேடையில் நடிகரை திட்டிய விஜய் சேதுபதி

பெரிய மனுஷன் மாதிரி நடந்துகோங்க.. மேடையில் நடிகரை திட்டிய விஜய் சேதுபதி

0

நடிகர் விமல் நடித்து இருக்கும் சார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு இருந்தார்.

ஒரு பள்ளிக்கூடம் பற்றிய கதை என்பதால் இந்த படத்திற்கு சார் என டைட்டில் வைத்து இருக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை வெளியிட இருக்கிறார்.

நடிகர் சரவணனை திட்டிய விஜய் சேதுபதி

பிக் பாஸ் புகழ் நடிகர் சரவணன் சார் படத்தில் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். அவரை பற்றி விஜய் சேதுபதி பெருமையாக மேடையில் பேசினார். அப்போது அருகில் அமர்ந்து இருந்த சரவணன் விஜய் சேதுபதி காலை தொட்டு கும்பிட்டார்.

அதனால் கோபமான விஜய் சேதுபதி ‘பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க’ என திட்டி இருக்கிறார்.

அதன் பின் மைக்கில் பேசிய சரவணன். நான் இன்னொரு படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கிறேன், அதனால் தான் அப்படி சொல்கிறார் என விளக்கம் கொடுத்து சமாளித்தார். 

Source: https://cineulagam.com/article/vijay-sethupathi-scold-saravanan-on-stage-1726665917

NO COMMENTS

Exit mobile version