நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு இன்று நடைபெற்று முடிந்து இருக்கிறது.
அதில் விஜய் ஆவேசமாக தனது அரசியல் நிலைப்பாடு, கொள்கைகள் என்ன என்பது பற்றி மேடையில் பேசி இருக்கிறார்.
தங்கை இறந்த போது..
“என் தங்கை வித்யா இறந்தபோது எனக்குள் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதே அளவுக்கு கொஞ்சமும் குறையாம வலியை ஏற்படுத்தியது தான் தங்கச்சி அனிதாவின் மரணம்.”
“தகுதி இருந்தும் தடையாக இருக்கே இந்த நீட்.. அப்போது ஒரு முடிவு செய்தேன் விஜய் அண்ணா என அன்போடு அழைக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி, வாழ்க்கையில் நிரந்தர பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன்” என விஜய் கூறி இருக்கிறார்.