Home இலங்கை அரசியல் கரி ஆனந்தசங்கரிக்கு விஜித ஹேரத் வாழ்த்து

கரி ஆனந்தசங்கரிக்கு விஜித ஹேரத் வாழ்த்து

0

இலங்கைத் தமிழரான கரி ஆனந்தசங்கரி கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியும் அவரது அமைச்சரவையும் நேற்று(14) பதவியேற்ற நிலையில் அந்நாட்டின் நீதி அமைச்சராக கரி ஆனந்தசங்கரி பதவியேற்றார்.

விஜித ஹேரத்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த விஜித ஹேரத்,

இலங்கையின் தமிழ் மக்கள் புலம்பெயர் நாடுகளில் முன்னணி வெற்றிகளை பதிவு செய்கின்றனர்.

அந்த வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரியின் மகனான
கரி ஆனந்தசங்கரி இன்று கனடாவின் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதனை எமது நாடு பெருமையாக கருதவேண்டும்.

இது போல உலக நாடுகளில் உள்ள இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் எமக்கு ஆரதவை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். 

NO COMMENTS

Exit mobile version