Home இலங்கை அரசியல் அரசியல் மோதல்களுக்கு மத்தியில் இரவு விருந்தில் ஒன்றுகூடிய எம்.பிக்கள்!

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் இரவு விருந்தில் ஒன்றுகூடிய எம்.பிக்கள்!

0

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வென்றில் தற்போதைய நாடாளுமன்றின் முக்கிய அமைச்சரவை அமைச்சர்களும், எதிர் தரப்பின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறன.

முன்னால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, சுசில் பிரேமஜயந்த, மேர்வின் சில்வா மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பலர் குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் குறித்த இரவு விருந்து நேற்று(17.10.2025) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல்வாதிகள் குழு

இதன்படி இந்த அரசியல்வாதிகள் குழு, தங்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியலுக்கு அப்பாற்பட்ட உரையாடலில் இணைந்திருந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விழாவில் இரு கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஒரே மேசையில் அமர்ந்திருப்பத புகைப்படங்கள் இதனை மையப்படுத்தியுள்ள.

NO COMMENTS

Exit mobile version