Home சினிமா பிரச்சனைகளை கடந்து வெளிவந்த வீர தீர சூரன்.. நன்றி கூறி விக்ரம் வெளியிட்ட வீடியோ

பிரச்சனைகளை கடந்து வெளிவந்த வீர தீர சூரன்.. நன்றி கூறி விக்ரம் வெளியிட்ட வீடியோ

0

வீர தீர சூரன்

நடிகர் விக்ரம் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் திரைப்படம் வீர தீர சூரன்.

இப்படம் மார்ச் 27ம் தேதி காலை சிறப்பு காட்சிக்கு வெளிவரவிருந்த நிலையில், நீதி மன்றத்தின் உத்தரவின் காரணமாக சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டது. காலை 10.30 மணிக்குள் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு படம் மதியம் 12 மணிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதிய காட்சியும் ரத்தானது.

‘தமிழில் அதிகமாக பேச மாட்டேன்’.. நடிகை மடோனா இப்படி கூறினாரா

இதனால் சியான் விக்ரமின் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். பின் 4 மணி அளவில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட நிலையில், மாலையில் முதல் காட்சி திரையிடப்பட்டது. முதல் நாள் வசூல் அடிவாங்கியிருந்தாலும் கூட, தற்போது மக்களிடையே பேராதரவை பெற்று 8 நாட்களில் ரூ. 54 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.

நன்றி தெரிவித்த விக்ரம்

இந்த நிலையில், பல பிரச்சனைகளை கடந்து திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வீர தீர சூரன் படத்திற்கு, மக்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து சியான் விக்ரம் வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

NO COMMENTS

Exit mobile version