Home இலங்கை அரசியல் அத்திப்பட்டி போல புதைந்த கிராமங்கள்! தேடும் இந்திய மீட்புக் குழுக்கள்!

அத்திப்பட்டி போல புதைந்த கிராமங்கள்! தேடும் இந்திய மீட்புக் குழுக்கள்!

0

இலங்கையில் தித்வா சூறாவழி ஏற்படுத்திய அழிவுகள் இன்னமும் முழுமையாக வெளியுலகுக்கு தெரியவரவில்லை. இதுவரை வெளிவந்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

வெள்ளம்,மற்று மண் சரிவுகள் காரணமாக இன்னமும் மீட்புக்குழுக்கள் செல்ல முடியாத வகையில் நிலைமை உள்ளது. சில மலையக கிராமங்கள் சிற்றிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமம் போல முழுமையா மண்சரிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி செய்திகள் வருகின்றன

குறுகிய நேரத்துக்குள் பெரிய வெள்ள நீரோட்டம் மற்றும் மண்சரிவுகள் உருவாக்கியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் எட்டு பெரிய நிலச்சரிவுகள் நடந்தன. வடக்கீலும் ஐம்பதிற்கும் மேற்பட்ட குளங்கள் வான் பாய்வதால் வெள்ள நிலவரம் தொடர்கிறது

தற்போது சிறிலங்காவின் முப்படையினருடன் இந்தியவான்படையும் இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையும் மீட்புபணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா தனது சிற்ராக் மற்றும் எம்ஐ-17 ரக உலங்குவானுர்திகள் களத்தில் இறக்கியுள்ளது.

அரச தலைவர் அனுரவின் உத்தரவில் சிறிலங்காவும் தன்னிடம் உள்ள இரண்டு அதிவிசேட பிரமுகர்களின் உலங்குவானூர்திகளை அவற்றின்
சொகுசு இருக்கைகளை கழற்றிவிட்டு அவற்றையும் களத்தில் இறக்க முடிவெடுத்துவிட்டதால், இனி அனுர உட்பட்ட அரச தலைகளும் இந்த விவிஐபி ஹெலிகளை பயன்படுத்த முடியாத நிலை வருகிறது..

கடும் வெள்ளம் காரணமாக, அனுராதபுரம் தெஹியத்தகண்டிய ஆகிய சிறைச்சாலைகளில் இருந்த சகல கைதிகளையும் தற்போது தற்காலிக தடுப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் சிறையில் இருந்த சில தமிழ்கைதிகளும் இப்போது வேறுஇடத்தில்; உள்ள பின்னணயில் பல பிரத்தியேக அவலம் மற்றும் திகில் தகவல்களுடன் வருகிறது செய்திவீச்சு …

https://www.youtube.com/embed/9ja-tBrd-pk

NO COMMENTS

Exit mobile version