Home இலங்கை அரசியல் ரணில் பக்கம் சாய்ந்தார் விமலின் எம்.பி

ரணில் பக்கம் சாய்ந்தார் விமலின் எம்.பி

0

புத்தளம் மாவட்டத்தில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர(Jagath Priyankara) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் இன்று(13) ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த எம்.பிக்கு பதிலாக நியமனம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த(Sanath Nishantha) கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஜகத் பிரியங்கர நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும்(rajitha senaratne) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/vimal-s-mp-jumps-into-ranil-1723541335

NO COMMENTS

Exit mobile version